Wednesday, 5 August 2015

சிவலிங்கம் என்றால் என்ன ???



ஒரு ஐந்து நிமிஷம் குடுத்து படிங்க எவ்வளவு பெரிய பித்தலாட்டங்கள் இதனால் நடைபெற்றது !!! படித்து சேர் செய்யவும் ~~~!!!


சிவ லிங்கம் என்றால் என்ன? என்ற கேள்வி பலகாலமாக நம்முள் இருந்து வருகிறது ! இதன் காரணமாய் பல பொய் பிரச்சாரங்கள் பொய் விமர்சனங்களுக்கு இந்துக்கள் ஆளாக வேண்டி உள்ளது இதனை களையவே இந்த பதிவு !!!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் எண்களை மிகவும் பக்குவத்துடன் கையான்டனர் ..........
அதை பின் அரேபியர்கள் மூலம் அனைவரும் பயன் படுத்தும் எண்களாக வெளியே சென்றது பின் இது இந்தோ-அரபியன் எண்களாக அறிமுகம் செய்ய பட்டது ...........(Refer: https://en.wikipedia.org/wiki/Arabic_numerals )

அதில் பூஜியம் நாம் தாம் முதலில் கண்டு பிடித்தோம் என்று பல ஆய்வுகள்  சொல்கிறது . 

அந்த பூஜியத்தை கண்டுபிடிக்க நம்மால் எப்படி முடிந்தது ?
சொல்கிறேன். பூஜியம் என்னும் ஞானம் கடந்த 2 நூற்றாண்டுகளாக தான் இருக்கிறது என்று உலகம் என்னலாம் ஆனால் உண்மையில் பூஜித்ததின் பொருள் சூனியம் (வடமொழியில் பூஜியத்தை ' சூனிய் ' Sūnyā  என்று தான் அழைப்பர்)
சூனியம் என்றால் வெறுமை , வெற்றிடம் , இவைகளை குறிக்க சூனியம் என்பது ........காற்றும் இல்லாத Space எனப்படுவது இந்த சூனியம் இந்த சூனியத்தில்  வட்டமாய் சுழித்து நடுவில் ஒரு புள்ளி வைத்து குறிப்பிடுவர் இதுவே பூஜியம் 
ஒன்றும் இல்லாத ஒன்றை எப்படி என்னாக அறிவிக்கலாம் ???
இதன் பதில் சுலபம் அந்த படத்தில் ஒரு புள்ளி அதை சுற்றி வட்டம் இடையில் ஒன்றும் இல்லை அதாவது ஒன்றுமில்லாததையும் ஏதோ ஒன்று இயக்குகின்றது என்பதே அதன் பொருள் ...........அந்த ஒன்றுமில்லாத ஒன்று ஒரு எண்ணுடன் சேர்ந்தால் பல மதிப்புகளை தரவல்லது (value)
அந்த ஒன்றுமில்லாத சூனியம் எனப்படும் ஒன்று இன்று கனித துறையில்  என்னில் அடங்காதவைகளை செய்ய வைக்கிறது 
அந்த எண் இல்லை என்றால் இன்று கணிதமே இல்லை என்பது தான் உண்மை 

இதற்கும் சிவலிங்கத்திற்கும் எண்ண சம்பந்தம் ? 
சொல்கிறேன் இந்த சூனியமே சிவலிங்கம் . சிவம் என்றால் சூனியம் என்பது பொருள் பண்டைய இந்தியாவில் இந்த சூனியம் எண்ணும் இந்த ஞானமே மேலானதாய் கருதபடுவது அந்த ஞாமே தலைசிறந்த ஞானம் 
காரணம் வெறுமை இன்றி ஒன்றும் செய்ய இயலாது ஒரு பூ பூக்க கூட ஆகாச மண்டலம் குறிபிட்ட தூரத்தில் இருப்பினே நடக்கும் அதுவே நியதி அந்த ஆகாச மண்டலத்தில் Space எனப்படும் வெற்றிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் அதை ஏதோ ஒன்று இயக்க வேண்டும் அந்த இயக்கமே சிவலிங்கம் வாண மண்டல ஆகாச ஞானமே சிவலிங்கம் 

இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் அந்த பூஜியமே இந்த சிவலிங்கத்தின் மேல் பகுதி அதை அலங்கரிக்க பட்ட பீடத்தின் மேல் வைத்து உள்ளனர் ..........அந்த சூனியமே தலையானது அது இல்லை என்றால் எதுவும் இல்லை !

சூனியம் கடவுளா எப்படி ? 
சொல்கிறேன் ! புத்தர் என்ன சொன்னார் கடவுள் சூனியம் என்றாரா ? 
குரான் என்ன சொல்கிறது அல்லா உருவமற்றவர்  என்கிறதா ? (சூனியம் என்றால் வெறுமை .......வெறுமையை தவிர்ந்து அனைத்திற்கும் உருவம் உண்டு) அப்படி பட்ட அந்த சூனியம் என்னும் ஆற்றலை இன்று அறிவியல் Dark Energy என்கிறது (*Refer : https://en.wikipedia.org/wiki/Dark_energy )

இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அலவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம் .

அப்பொழுது கையில் சூலத்துடன் இருப்பவர் சிவன் இல்லையா ?  
இல்லை அவர் சங்கரன் சிவன் வேறு சங்கரர் வேறு .......எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால் ஒரு மருத்துவ படிப்பு படித்திவர் மருத்துவர் அது போல சிவத்தை உணர்ந்தவர் சிவன் இதுவே காரணம் இவரை நாம் சிவன் என்று அழைக்க ......!!! 

வேண்டுகோள் : இதை படித்து புரிந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி இதை சமூக விழிப்புணர்விற்காக பதிவு செய்துள்ளேன் ஷேர் செய்யுங்கள் பலர் இதை புரிந்து கொள்வார் .........சில காலமாக இதை பற்றிய தவறான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது தாம் செய்யும் ஒரு ஷேர் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும் நன்றி !!! 









9 comments:

  1. நல்வாழ்த்துக்கள் நண்பரே.....

    ReplyDelete
  2. இப்போ சிவலிங்கத்தை வணங்கலாமா வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. 100% வணக்கத்திற்கு உரியது சிவ லிங்கம்

      Delete
  3. ஆம் அதுவே உண்மை. ஆம் அந்த வெற்றிடத்தை ஆளும் சக்தி அன்பு தான் வேறொன்றும்மில்லை. அது தான் அந்த மாபெரும்சக்தி.

    ReplyDelete
  4. அருமை நண்பரே

    ReplyDelete
  5. சிவனே அகிலம் அதில் இல்லாதது எதுவுமே இல்ல எனலாம்

    ReplyDelete