Thursday, 6 August 2015

சூத்திரர் என்றால் வேசி மகன் என்றா பொருள் ???


இது முற்றிலும் ஆதாரமற்ற புலுகாகும் சூத்திரன் என்றால் வேசி மகன் என்பதற்கு !!!

அடிமைகள் 7 வகை படுவர் என மனுதர்மத்தில் 8ஆவது அதிகாரத்தில் 415 ஆம் சுலோகம் உள்ளது அதில் 

In English :

415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in slave house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.
தமிழாக்கம் : 

அடிமைகள் ஏழு வகைகளில் வருகிறார்கள் - 
போரில் அடிமைப்பட்டவன்,
உணவிற்காக வேலை செய்பவன், 
அடிமை வீட்டில் பிறந்தவன், 
வாங்கியவன், 
கொடுக்கப்பட்டவன், 
மூதாதையரால் தரப்பட்டவன், 
தண்டனையாக் அடிமைப்படுத்தப்பட்டவன்


மனுதர்மத்தில் இதுவும் அடிமைகளுக்கு தந்த இலக்கணமே ஒழிய சூத்திரர்களுக்கு இல்லை

சூத்திரன் என்ற சொல்லின் பொருள் என்ன என்றால்

சூத்திரம் - Technique (tɛkˈniːk) - உத்தி , குறிப்பிட்ட கலையில் தேர்ந்த திறன்

சூத்திரன் - Technician (tɛkˈnɪʃ(ə)n) - தொழில்நுட்ப வல்லுநர்




இதுவே உண்மையான சூத்திரன் என்ற சொல்லின் பொருள்

இதை தான் இன்று பகுத்தறிவு என்ற பெயரில் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று கேனை தனமாக சொல்கின்றனர் !



சூத்திரன் என்றால் வேசி மகன் என்று சொல்வதற்கு தகுந்த ஆதாரம் இருந்தால் வாங்க பேசுவோம் !!!


இதையே ஈவெரா திரும்ப திரும்ப சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தான் அவன் கூறுகையில்


கீழ் இருக்கும் வகைகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்னும் பெரியார் மொழி பெயர்த்தது 
(*Refer : http://www.viduthalai.in/page5/42751-where-brahmin-where-brahmin.html )

///////////

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்

2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்

(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

////////////////////////////



இதுவே ஈவெரா வின் கூற்று 
நான் தந்த சுலோகத்தில் எங்காவது சூத்திரன் என்றால் வேசி மகன் என்று வருகிறதா என்ன ????

இப்படி வெட்கமே இல்லாமல் பொய் பிரச்சாரம் செய்வது ஏன் ???

வேண்டுகோள் : தமிழர்களை திராவிடம் பேசி பலகாலமாக ஏமாற்றி வரும் ஈவெரா விடம் இருந்து இந்துக்கள் தங்களை காத்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்க வேண்டும் பகிரவேண்டும் 

இதை பகிர இந்த Link Copy செய்து போடவும் http://shivasivam.blogspot.com/2015/08/Shudra.html



Wednesday, 5 August 2015

சூத்திரர் பாபயோனியில் பிறந்தவர்கள் என்றா கீதை 09-32 சொல்கிறது ????


मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும், 
சூத்திரரும் பரகதி பெறுவார்.


இன்று நாட்டில் சர்ச்சை பெருகிக்கொண்டே வரும் சுலோகங்களில் ஒன்று இந்த சுலோகம் இதில் பெண்கள் , வைசியர் , சூத்திரர் பாப யோனியில் பிறந்ததாக சொல்லி பொய் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர் பாப யோனி என்றால் என்ன தெரியுமா இவர்களை பெற்ற தாயின் பிறப்புறுப்பு பாபமானாதம் இப்படியெல்லாம் நாகூசாமல் பொய் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது ....................


இதை எவ்வாறு எதிர் கொள்ள முடியும் என்றால் சரியான விளக்கத்தினாலே மட்டுமே !!!

மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம்  || 9- 32||
ட்டு ஃப

இதுவே அந்த சுலோகம் அதில் சிகப்பாக குறிப்பிட்டுள்ள சமஸ்கிருதவார்த்தையே சர்ச்சையாக மாற்றபட்டது ..........பாபயோநய என்று தான் உள்ளது பாபயோனி என்று இல்லை அதாவது பாபயோநய என்றால் பாபிகள் என்று பொருள் ...........இந்த பாபிகள் என்னும் சொல்லானதை பாபயோனியில் பிறந்தவர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர் விலைமாதர் சந்ததியினர்

இதன் பொருள் பாபிகளானாலும் , பெண்கள் ஆனாலும் , வையிசியரானாலும்(வியாபாரிகள்) சூத்திரர் ஆனாலும் (உழைப்பாளிகள் ஆனாலும்) என்னிடம் சரணடைந்தால் பரமகதி அடைவர் என்பதே சத்தியமான பொருள் இதை திரித்து பேசுகின்றனர் 

வேண்டுகோள் :இதை படித்து பகிந்து கொள்ள வேண்டுகிறேன் காரணம் சமூகத்தில் பல பல பொய் பிரச்சாரங்கள்(விபச்சாரங்கள்) நடைபெற்று வருகிறது 
கீதையின் மானம் மரியாதையை கெட்டுத்தவர்கள் முதலில் பேசும் இந்த சுலோகம் சர்ச்சைக்குரிய சுலோகம் இதை படித்து பகிருங்கள் நன்றி (பகிர்வது என்றால் உங்கள் இனையத்தில் மேல் உள்ள இந்த லிங்கை பதியுங்கள் http://shivasivam.blogspot.com/2015/08/gita-09-32.html   )

நாளை ஜாதியை நானே படைத்தேன்என்று கிருஷ்ணன் சொல்லும் உண்மையான பொருளை காண்போம் 



சிவலிங்கம் என்றால் என்ன ???



ஒரு ஐந்து நிமிஷம் குடுத்து படிங்க எவ்வளவு பெரிய பித்தலாட்டங்கள் இதனால் நடைபெற்றது !!! படித்து சேர் செய்யவும் ~~~!!!


சிவ லிங்கம் என்றால் என்ன? என்ற கேள்வி பலகாலமாக நம்முள் இருந்து வருகிறது ! இதன் காரணமாய் பல பொய் பிரச்சாரங்கள் பொய் விமர்சனங்களுக்கு இந்துக்கள் ஆளாக வேண்டி உள்ளது இதனை களையவே இந்த பதிவு !!!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் எண்களை மிகவும் பக்குவத்துடன் கையான்டனர் ..........
அதை பின் அரேபியர்கள் மூலம் அனைவரும் பயன் படுத்தும் எண்களாக வெளியே சென்றது பின் இது இந்தோ-அரபியன் எண்களாக அறிமுகம் செய்ய பட்டது ...........(Refer: https://en.wikipedia.org/wiki/Arabic_numerals )

அதில் பூஜியம் நாம் தாம் முதலில் கண்டு பிடித்தோம் என்று பல ஆய்வுகள்  சொல்கிறது . 

அந்த பூஜியத்தை கண்டுபிடிக்க நம்மால் எப்படி முடிந்தது ?
சொல்கிறேன். பூஜியம் என்னும் ஞானம் கடந்த 2 நூற்றாண்டுகளாக தான் இருக்கிறது என்று உலகம் என்னலாம் ஆனால் உண்மையில் பூஜித்ததின் பொருள் சூனியம் (வடமொழியில் பூஜியத்தை ' சூனிய் ' Sūnyā  என்று தான் அழைப்பர்)
சூனியம் என்றால் வெறுமை , வெற்றிடம் , இவைகளை குறிக்க சூனியம் என்பது ........காற்றும் இல்லாத Space எனப்படுவது இந்த சூனியம் இந்த சூனியத்தில்  வட்டமாய் சுழித்து நடுவில் ஒரு புள்ளி வைத்து குறிப்பிடுவர் இதுவே பூஜியம் 
ஒன்றும் இல்லாத ஒன்றை எப்படி என்னாக அறிவிக்கலாம் ???
இதன் பதில் சுலபம் அந்த படத்தில் ஒரு புள்ளி அதை சுற்றி வட்டம் இடையில் ஒன்றும் இல்லை அதாவது ஒன்றுமில்லாததையும் ஏதோ ஒன்று இயக்குகின்றது என்பதே அதன் பொருள் ...........அந்த ஒன்றுமில்லாத ஒன்று ஒரு எண்ணுடன் சேர்ந்தால் பல மதிப்புகளை தரவல்லது (value)
அந்த ஒன்றுமில்லாத சூனியம் எனப்படும் ஒன்று இன்று கனித துறையில்  என்னில் அடங்காதவைகளை செய்ய வைக்கிறது 
அந்த எண் இல்லை என்றால் இன்று கணிதமே இல்லை என்பது தான் உண்மை 

இதற்கும் சிவலிங்கத்திற்கும் எண்ண சம்பந்தம் ? 
சொல்கிறேன் இந்த சூனியமே சிவலிங்கம் . சிவம் என்றால் சூனியம் என்பது பொருள் பண்டைய இந்தியாவில் இந்த சூனியம் எண்ணும் இந்த ஞானமே மேலானதாய் கருதபடுவது அந்த ஞாமே தலைசிறந்த ஞானம் 
காரணம் வெறுமை இன்றி ஒன்றும் செய்ய இயலாது ஒரு பூ பூக்க கூட ஆகாச மண்டலம் குறிபிட்ட தூரத்தில் இருப்பினே நடக்கும் அதுவே நியதி அந்த ஆகாச மண்டலத்தில் Space எனப்படும் வெற்றிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும் அதை ஏதோ ஒன்று இயக்க வேண்டும் அந்த இயக்கமே சிவலிங்கம் வாண மண்டல ஆகாச ஞானமே சிவலிங்கம் 

இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் அந்த பூஜியமே இந்த சிவலிங்கத்தின் மேல் பகுதி அதை அலங்கரிக்க பட்ட பீடத்தின் மேல் வைத்து உள்ளனர் ..........அந்த சூனியமே தலையானது அது இல்லை என்றால் எதுவும் இல்லை !

சூனியம் கடவுளா எப்படி ? 
சொல்கிறேன் ! புத்தர் என்ன சொன்னார் கடவுள் சூனியம் என்றாரா ? 
குரான் என்ன சொல்கிறது அல்லா உருவமற்றவர்  என்கிறதா ? (சூனியம் என்றால் வெறுமை .......வெறுமையை தவிர்ந்து அனைத்திற்கும் உருவம் உண்டு) அப்படி பட்ட அந்த சூனியம் என்னும் ஆற்றலை இன்று அறிவியல் Dark Energy என்கிறது (*Refer : https://en.wikipedia.org/wiki/Dark_energy )

இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அலவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம் .

அப்பொழுது கையில் சூலத்துடன் இருப்பவர் சிவன் இல்லையா ?  
இல்லை அவர் சங்கரன் சிவன் வேறு சங்கரர் வேறு .......எப்படி புரிந்து கொள்ளலாம் என்றால் ஒரு மருத்துவ படிப்பு படித்திவர் மருத்துவர் அது போல சிவத்தை உணர்ந்தவர் சிவன் இதுவே காரணம் இவரை நாம் சிவன் என்று அழைக்க ......!!! 

வேண்டுகோள் : இதை படித்து புரிந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி இதை சமூக விழிப்புணர்விற்காக பதிவு செய்துள்ளேன் ஷேர் செய்யுங்கள் பலர் இதை புரிந்து கொள்வார் .........சில காலமாக இதை பற்றிய தவறான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது தாம் செய்யும் ஒரு ஷேர் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும் நன்றி !!!